தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது .
இந்த நிலையில், இன்று அதிகாலையில் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, தாம்பரம் என் பரவலாக மழை பெய்து உள்ளது.
இந்நிலையில், இன்று மாலை வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னை - வேலூர் முதல் டெல்டா- தூத்துக்குடி பகுதிகள் வரை மழை பெய்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை பகுதிகளில் மிக கன மழை பதிவாகியுள்ளது, இந்த மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. தென் தமிழகத்திலும் மழை பெய்யும். மாஞ்சோலை பகுதிகளிலும் மழை பெய்யும்"என்று தெரிவித்துள்ளார்.