#featured_image %name%
#image_titleரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் காரணமாக திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது…!!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது…!!
அதன்படி, வரும் ஜனவரி 16, 23 30 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் மாலை 6:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06070, எழும்பூர் வரை செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது…!!
இதேபோல், ஜனவரி 17, 24, 31 மற்றும் பிப்ரவரி 7-ஆம் தேதி ஆகிய நாட்களில் வண்டி எண் 06069 திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 03.15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது…!!
இதற்கு ஏற்றார் போல் பயணிகள் அனைவரும் தங்கள் பயண நேரத்தை சீரமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை நிறைவடைந்து சென்னைக்குக் கிளம்பும் பயணிகள் கவனிக்கவும்..
மதுரை-சென்னை எழும்பூர் இடையே MEMU வகை முன்பதிவில்லா சிறப்பு இரயில்(06062) இன்று 19.01.25(ஞாயிறு) இயக்கப்படுகிறது.
தேதி: ஞாயிறு/19.01.25
மதுரை புறப்பாடு:` மாலை 16.00
சென்னை எழும்பூர் வருகை நள்ளிரவு 00.45
பொங்கல் பண்டிகை நிறைவடைந்து சென்னைக்கு செல்லும் தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் இந்த முன்பதிவில்லா மலிவுவிலை கட்டண MEMU ரயில் சேவையை கடைசி வாய்ப்பாக பயன்படுத்தலாம்.
News First Appeared in