“வேலை செய்…” 10 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்…!!
SeithiSolai Tamil January 20, 2025 02:48 AM

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு காவியா(13), அட்சயா(10) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் காவியா ஆலம்பாளையத்தில் இருக்கும் தாத்தா வீட்டில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அட்சயா பெற்றோருடன் தங்கி இருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

இந்த நிலையில் சரவணன் மஞ்சுளாவும் அட்சயாவிடம் வீட்டு வேலைகளை செய்யுமாறு கூறினர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அட்சயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.