பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருப்பரங்குன்றத்தின் மலையில் ஆடு வெட்டி சடங்கு செய்வோம் என்று இஸ்லாமியர்கள் திரண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆடுகளை பலி கொடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்று வாருங்கள், பின்னர் பார்ப்போம் என்று காவல் துறையினர் கூறியிருப்பதாக அறிகிறோம்.
ஆனால், மலைக்கு மேல் குறிப்பிட்ட, முறையான உரிய இடத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் இன்று வரை காவல் துறையினர் ஹிந்துக்கள் அந்த இடத்தில் தீபத்தை ஏற்ற அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.