இன்று காலை ஒரே நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து, பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்றிருப்பவர்கள் சென்னையை நோக்கி குவிவதால், சென்னை புறநகர் பகுதிகளிலும், சென்னையின் நுழைவு பகுதியிலும் நேற்றி இரவு முதலே கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக இன்று காலை 4 மணி முதல் சிறப்பு புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.
தாம்பரம் – காட்டாங்குளத் காட்டாங்குளத்தூர் இடையே இன்று ஜனவரி 20ம் தேதி திங்கட்கிழமையில் அதிகாலை 4 மணி முதல் சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்படுகிறது. இன்று காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 4, 4,30, 5, 5.45, 6.20க்கு சிறப்பு ரயில்கள் புறப்படும்.
அதே போன்று தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.