தூத்துக்குடி மாவட்டம், பனையூர் கிராமத்தில் வசித்து வந்த கணேசன் என்பவர், தனது மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (43). கூலி தொழிலாளியான இவரை விட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்து வந்த அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் படுக்கையில் மயங்கி கிடந்தாராம். அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்