11வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் 13 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு கோவாவில் வைத்து ஈஸ்ட் பெங்கால் எஃப் சி மற்றும் எஃப் சி கோவா அணிகள் மோதிக்கொண்டன. ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் 13வது நிமிடத்தில் கோவா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.
அதன் பிறகு நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் இறுதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் 1 – 0 என்ற கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.