பரந்தூர் செல்லும் விஜய்… தவெக தொண்டர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!!
SeithiSolai Tamil January 20, 2025 11:48 AM

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல்வாய், நாகபட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டம் நடத்தும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை அங்கு செல்ல இருக்கிறார்.

அங்கு சென்று ஏகனாபுரத்தில் வாழும் மக்களை சந்தித்து பேச உள்ளார். இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு தலைவர் விஜய் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் பரந்தூருக்கு நாளை தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்றும், நேரில் செல்ல உள்ளதால் பொதுமக்களும் அதிக அளவில் வரவுள்ளதால் அங்கு வர வேண்டாம் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவக்கியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.