தமிழகமே ஷாக்.. பரிகாரம் செய்தும் பலிக்கவில்லை: ஜோதிடர் கூலிப்படை ஏவி கொலை - பெண் வெறிச்செயல்..!
Tamilspark Tamil January 20, 2025 05:48 AM
பணத்தை வாங்கிக்கொண்டு கூறிய ஜோதிடம் பழிக்காததால், பணத்தை பெண்மணி திரும்பி கேட்டு உருவான தகராறில் ஜோதிடர் கொல்லப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், கோட்டவிளை பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஸ்டீபன். இவர் நாட்டு வைத்தியராகவும், ஜோதிடமும் பார்த்து வந்துள்ளார். திருமணமாகி மனைவி, மகன், மகள் இருக்கின்றனர். மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் கோயம்புத்தூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் தம்பதிகள் மட்டுமே தற்போது வீட்டில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:

காவல்துறை விசாரணை

கடந்த ஜன.8 ம் தேதி ஜான் வீட்டில் சடலமாக, உடலில் இரத்தக்காயத்துடன் மீட்கப்பட்டார். தகவ்ல அறிந்த காவல்துறையினர், ஜானின் உடலை எம்கேட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆசாரிபள்ளம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியானது.

ஜோதிடம் பலிக்காததால் சோகம்

தனிப்படை காவல் துறையினர் இரணியல், மாங்கோடு பகுதியில் வசித்து வந்த கலையரசி (வயது 43), திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருவேலங்குளம் பகுதியில் வசித்து வரும் நம்பிராஜன் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், கலையரசி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது கணவருடன் சேர்ந்து வாழ ஜோதிடம் பார்க்க ஜானிடம் வந்துள்ளார். அவர் பரிகாரம் சொல்லி பணம் வாங்கி இருக்கிறார்.

கூலிப்படை ஏவி விபரீதம்

பரிகாரத்தை செய்தும் கணவருடன் சேர்ந்து வாழ இயலாத சூழ்நிலை ஏற்படவே, கலையரசி கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகி இருக்கிறார். மேலும், ஜானிடம் ஜோதிடம் பலிக்கவில்லை எனக்கூறி பணத்தை கேட்டுள்ளார். ஜான் பணத்தை வழங்க மறுத்ததால், முன்விரோதம் உண்டாகி இருக்கிறது. இதனால் ஸ்டீபனை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தவர், கூலிப்படை ஏவி கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இவர்களின் திட்டப்படி நம்பிராஜன் ஜானை கொலை செய்து இருக்கிறார் என்பது உறுதியானது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.