தெலுங்கு நடிகரும் எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா நடித்த `டாக்கு மகராஜ்' திரைப்படம் ஆந்திரா முழுவதும் கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் முதல் காட்சியின் போது, திருப்பதியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் திரையிடப்பட்டது. அப்போது, அவரது ரசிகர்கள் தியேட்டர் முன் ஒரு ஆட்டை பலியிட்டு, பாலகிருஷ்ணா திரைப்பட போஸ்டரில் ஆட்டின் ரத்தத்தை தெளித்தனர்.
இந்தக் காட்சியை பாலகிருஷ்ணாவின் மற்ற ரசிகர்களும், திரையரங்கிற்குச் சென்ற பொதுமக்களும் பார்த்தனர். மேலும், ஆடு பலியிடப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த சம்பவம் நடந்து 6 நாட்களுக்குப் பிறகு, திருப்பதி காவல்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. போலீசார் விசாரித்து, நேற்று பாலகிருஷ்ணாவின் ரசிகர்களான சங்கரய்யா, ரமேஷ், சுரேஷ் ரெட்டி, பிரசாத் மற்றும் லோகேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
!