ஆவடி அருகே இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆவடியை அடுத்த பட்டாபிராம்,ஆயில்சேரி கிராமம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன்.இவரது மகன்கள் 27 வயதான ரெட்டைமலை சீனிவாசன்.24 வயதான ஸ்டாலின். இரட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் மீது பட்டாபிராம், ஆவடி, பூந்தமல்லி காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில் இரட்டைமலை சீனிவாசனும், அவரது தம்பி ஸ்டாலினும் வீட்டருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் இருவரையும் வெட்டியுள்ளனர். அப்போது இருவரும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி உள்ளனர்.
இருந்தபோதிலும் ஓட ஓட இருவரையும் கும்பல் வெட்டி உள்ளது. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஸ்டாலின் வீட்டின் அருகே உயிரிழந்தார். இரட்டைமலை சீனிவாசன் வலது காலில் வெட்டு காயத்துடன் தப்பி அங்கிருந்து ஓடி ஆவடி, தனலட்சுமி நகர் பகுதிக்கு சென்று ஒரு புதருக்குள் பதுங்கி உள்ளார். இருந்த போதிலும் விடாமல் பின் தொடர்ந்து சென்ற கும்பல் அவரை அங்கு வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது.இதன் பிறகு கும்பல் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளனர்.புகாரின் அடிப்படையில் ஆவடி மற்றும் பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அண்ணன்_தம்பி கொலை தொடர்பாக விசாரணை நடத்தியதில், முன்பகை காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 6 தனிப்படை அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு கஜேந்திரனின் மூத்த மகன் கக்கன் என்பவரை பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் கொலை செய்தனர். கஜேந்திரனின் மூன்று மகன்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.