குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 9ம் தேதி வடிக்கால் அருகே தூக்கி வீசப்பட்ட நிலையில் கரு ஒன்று இருந்துள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்தக் கருவை சிலர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர் சோதித்ததில், அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிந்தது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 16 வயதான சிறுமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சிறுமி மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் தெரியவந்தது. அதாவது அந்தச் சிறுமிக்கும், 17 வயதான சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதை அறிந்ததும் சிறுவன் மும்பைக்கு தப்பி ஓடினார். அதோடு சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க மும்பையில் இருந்து மருந்துகளை வாங்கி அனுப்பியுள்ளார். இதை சாப்பிட்ட சிறுமிக்கு வீட்டிலேயே கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கருவை வடிகால் அருகே தூக்கி வீசி உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமி காவல்துறையினரின் உதவியோடு மருத்துவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனை தேடி கைது செய்துள்ளனர்.