14 வயது சிறுமி கர்ப்பம்; திருமணமான 26 வயது நபரின் அதிர்ச்சி செயல்.. போக்ஸோவில் உள்ளே வைத்த காவல்துறை.!
Tamilspark Tamil January 20, 2025 03:48 AM

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், பெண்ணாடம், சிலுப்பனூர் கிராமத்தில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவரின் மகன் வீரமணி (வயது 26). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

இதனிடையே, அங்குள்ள வேறொரு கிராமத்தில் வசித்து வரும் 14 வயது சிறுமியிடம், வீரமணி பேசிப்பழகி வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய நபர், ஒருகட்டத்தில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரியவருகிறது.

இதையும் படிங்க:

மருத்துவமனையில் கர்ப்பம் அம்பலம்

சமீபத்தில் சிறுமிக்கு உடல்நிலையில் மாற்றம் ஏற்படவே, பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில், சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது.

இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் விசாரித்தபோது வீரமணியின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் வீரமணிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.