நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று தற்போதைய இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பிரபல சன் நியூஸ் மற்றும் நியூஸ் 18 ஆகிய தொலைக்காட்சி சேனல்களுக்கு பிரத்தியேகமாக கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். சங்ககிரி ராஜ்குமார் வெங்காயம் மற்றும் பயோஸ்கோப் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் ஒரு தொலைக்காட்சி சேனலில் டைட்டில் அனிமேட்டராக வேலை பார்த்து வந்த நிலையில் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் செங்கோட்டையன் சீமானுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
நான் அவருக்கு சில போட்டோக்களை எடிட் செய்து கொடுத்துள்ளேன். அவர் என்னிடம் ஒருமுறை சீமானுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவர் பிரபாகரனுடன் சேர்ந்து இருப்பது போன்று போட்டோவை எடிட் செய்து தர வேண்டும் என்று என்னிடம் கேட்டார். என்னால் முடிந்த அளவுக்கு அந்த போட்டோவை எடிட் செய்து இருவரும் அருகே இருப்பது போன்று கொடுத்தேன். அதன் பிறகு சீமான் மற்றும் பிரபாகரன் பற்றி பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் இது தொடர்பாக நான் செங்கோட்டையனை சந்தித்து கேட்டபோது அவர் நம்மால் ஒரு அரசியல் தலைவர் உருவாகிவிட்டார் என்றார். ஆனால் அப்போதே இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறப்பட்டது.
ஆனால் நான் அதைப் பற்றி இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற போட்டோ நான் எடிட் செய்து கொடுத்தது தான். அந்த போட்டோவை தவிர வேறு எந்த ஒரு போட்டோவும் இணையத்தில் இருக்காது. அவர் பிரபாகரனை சந்தித்தார் சந்திக்கும்போது போட்டோ எடுத்து அரை என்பதை பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் தற்போது சீமான் இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தி செல்கிறார். அதன் காரணமாகத்தான் உண்மையை சொன்னதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய பேட்டி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.