பொதுமக்கள் அதிர்ச்சி... திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்மப் பொருள்!
Dinamaalai January 19, 2025 11:48 PM

இன்று காலை திடீரென்று புதுச்சேரி நகர் பகுதியில் இன்று பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சத்தில் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினம் என்பதால் பலரும் வீடுகளில் இருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி நகர் பகுதியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வெடித்து சிதறியது. விடுமுறை தினம் என்பதால் பலரும் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மர்மப் பொருள் வெடித்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

வெடி சத்தம் கேட்டுப் பலரும் தங்களது வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.  இதனிடையே பட்டாசு வெடிப்பால் தான் பயங்கர சத்தம் எழுந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.