வலைப்பேச்சு டீம் இப்போது சினிமா குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்குப் சொல்கிறார்கள். அதுல ஒரு ரசிகர் கேட்ட கேள்விதான் இது. கார்த்தி, சூர்யா நடிப்புல யாருக்கு மார்க்கெட் அதிகம்னு கேட்டுருக்காங்க.
அதுக்கு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொன்ன பதில் இது. 'சமீபத்தில் கங்குவா வந்தது. இதுல கார்த்தி நடிக்க முடியுமான்னா முடியாது. ஏன்னா சூர்யாவுக்குன்னு ஒரு கமர்ஷியல் வேல்யு இருக்கு. மக்கள் அதை ஏத்துக்கிட்டாங்க.
ஆக்ஷன் ஹீரோ: மக்களும் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவா ஏத்துக்கிட்டாங்க. அந்த இடத்துக்கு இன்னும் கார்த்தி வரல இல்ல. அப்படிப் பார்க்கும்போது சூர்யாதான் முதல் இடத்துல இருக்காரு. கார்த்தி 2வது இடத்துல தான் இருக்காரு' என்கிறார்.
அடுத்து பதில் பிஸ்மி பதில் சொல்லும்போது, 'வியாபாரத்திலும் வசூலிலும் சூர்யா தான் உயரத்தில் இருக்கிறார். அதே நேரம் வெற்றி சதவீதத்தில் கார்;த்தி தான் சூர்யாவை விட அதிக வெற்றி கொடுத்துருக்காரு. அவருக்கு ஜப்பான் போன்ற வெகுசில படங்கள்தான் அட்டர் பிளாப்பாக இருக்கும்.
மெய்யழகன்: காஷ்மோரா போன்ற படங்களைச் சொல்லலாம். பெரும்பாலான படங்களைப் பார்த்தா வியாபார ரீதியாக கலெக்ட் பண்ணிரும்' என்கிறார். அப்போது சக்திவேல் 'முக்கியமான படத்தை விட்டுட்டீங்க...'ன்னு சொல்கிறார். 'மெய்யழகனா'ன்னு கேட்கும் பிஸ்மியிடம் 'அது எவ்வளவு நல்ல படம்..'னு சக்தி வேல் சொல்லி விட்டு 'தேவ்' என்கிறார்.
அடுத்து அந்தனன், 'கார்த்தி வந்து செல்ப் புரொமோஷன் பண்ணிக்க மாட்டேங்கறாரு. மற்ற நடிகர்கள் மாதிரி அவங்களே ரசிகர் மன்றத்தை உருவாக்குறது, போஸ்டர் அடிச்சி ஒட்டுறது. அவங்களே ஒரு 10 பேரை விட்டு கூவ விடுறது இது எல்லாமே நடக்குது. அந்த ஏரியாவுக்கு இன்னும் கார்த்தி வர மாட்டேங்கறாரு' என்கிறார்.
இணையக்கூலிப்படை: 'அப்படின்னா இன்னும் அந்த இணையக்கூலிப்படைகளா போகல..'ன்னு பிஸ்மி சொல்கிறார். அந்தனன் 'அவர் உருவாக்கி இருந்தா இந்தக் கேள்விக்கே இடம் இல்லாமப் போயிருக்கும்'னு சொல்றாரு. 'ஆனா சமீப காலமாக கார்த்தியும் அப்படி ஒரு வேலையை ஆரம்பிச்சிட்டதா ஒரு தகவல் இருக்கு.
கார்த்தியும் ஒரு டீமை ரெடி பண்ணிருக்காரு. இவரு போடுற டிரஸ், எப்படி நடக்கணும்? எப்படி பேசணும்கறதை எல்லாம் அவங்க டிசைன் பண்றாங்கங்கற மாதிரி ஒரு தகவல் வருது. சமீபகாலமாக அவரோட நடவடிக்கையில் சின்ன மாற்றம் தெரியுது. அதுக்கு இதுதான் காரணம்' என்று முடிக்கிறார் பிஸ்மி.
மேற்கண்ட விவாதத்தில் இணையக் கூலிப்படைகள் பற்றிப் பேசி இருக்காங்க. அதை வைத்து இருப்பவர் யார்னா சிவகார்த்திகேயன் என்று முன்பு ஒரு முறை பேசுகையில் இவர்களே சொல்லி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.