தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், பாடகர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மிஷ்கின். இயக்குனர் மிஷ்கினின் படங்கள் என்றாலே அதில் ஒரு தனித்துவம் இருக்கும். அது ஒரு கவிதை நயமாக இருக்கும். அடுத்தடுத்த திருப்பங்களை யூகிக்க முடியாது. இவரது இயக்கத்தில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்கள் பேசப்பட்டன.
பாட்டல் ராதா: நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாட்டல் ராதா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிஷ்கின் இளையராஜா குறித்து சில விஷயங்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.
உதவி இயக்குனரா இருந்த போது மது அருந்த செல்வாராம். சிவாஜி, பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜான்னு பேசிக்கிட்டே இருப்பாராம். அப்போ மதுவை விரும்பி குடிப்பாராம். பாடுவாராம். காலேஜ் படிக்கும்போது மது அருந்தி விட்டுத்தான் பாடினாராம். முதல் பரிசு கிடைத்ததாம்.
மிகப்பெரிய போதை: அதனால மது குடித்த போது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாம். தொடர்ந்து மிஷ்கின் பேசியபோது, இப்படி சொல்கிறார். இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. அதைவிட இளையராஜான்னு ஒருத்தன் இருக்கான். அவன் மிகப்பெரிய போதை எனக்கு.
இளையராஜா: பலரையும் குடிகாரனாக மாத்தியது அவர்தான்னு வச்சிக்கலாம் என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். அப்படி சொல்லும்போது மிஷ்கின் இளையராஜா தனக்கு மிகப்பெரிய போதை என்றும் சொல்லி இருப்பதால் அவரையும் இளையராஜா குடிகாரனாக மாற்றியுள்ளாரா என்று கேள்வி எழுகிறது.
சர்ச்சை: பொதுவாக மிஷ்கின் பேசினாலே அது சர்ச்சையாகி விடும். சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு ஒண்ணொண்ணா போடுவாங்க. அவரு எதை நினைத்து பேசுகிறாரோ தெரியவில்லை. ஆனால் மனதில் பட்டதை சொல்லி விடுகிறார். அதனால் வரும் விளைவுகளைப் பற்றி துளியும் கவலை கொள்வதாக தெரியவில்லை.
அவருடைய பக்கம் அது நியாயமான கருத்தாகவும் இருக்கலாம். சிலர் மனம் விட்டு போதையில் தான் பேசுவாங்க. அப்போது இளையராஜாவின் பாடல்கள் அவர்களுக்கு தேவாமிர்தமாக இருக்கும். அதனால் அவர் சொன்னதை நாம் சர்ச்சையாக்கவோ விமர்சிக்கவோ தேவையில்லை.