திமுகவில் இணைந்தார் சத்யராஜ் மகள் திவ்யா.. 2026 தேர்தலில் போட்டியா?
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர், கழகத் தலைவர் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுக.,வில் இணைந்தார்.
அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் நடிகர் சத்யராஜ் என்ற நிலையில், அவரது மகள் திவ்யா இன்று திமுகவில் இணைந்துள்ளார். சமீப காலமாகவே திவ்யா தனது சமூக வலைதள பக்கங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்த நிலையில் இன்று முதல் அதிகாரபூர்வமாக அரசியலில் இணைந்துவிட்டார். அவருக்கு வரும் 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva