மதுரை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்பட்டி அருகே குன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன். இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அன்னக்கிளி மாட்டுப்பொங்கல் அன்று சாதம் வடித்த கொதிநீரை கீழே கொட்டாமல் வைத்துள்ளார்.
அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த அவருடைய மகன் நிவிநேஷ் எதிர்பாராதவிதமாக கொதிநீரில் தவறி விழுந்துள்ளார். இதில் சிறுவன் உடல் வெந்து அலறி துடித்தார். இதைப்பார்த்து ஓடிவந்த அன்னக்கிளி குழந்தையை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.