அண்ணாமலையாரின் தீப மை பிரசாதம் - பேக்கிங் செய்யும் பணி தீவிரம்.!
Seithipunal Tamil January 20, 2025 03:48 AM

கடந்த டிசம்பர் மாதம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்தது.

இந்த மகா தீபத்திற்கு ஏராளமான பக்தர்கள் நெய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டதனை தொடர்ந்து மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

அதன்படி கடந்த 13-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு தீப மை அணிவிக்கப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் தீ மை பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய 'பேக்கிங்' செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களிடம் உள்ள டோக்கனை வழங்கி மை பிரசாதத்தை பெற்று கொள்ளலாம். தீப மை பிரசாதம் வருகிற 20-ந் தேதி (திங்கள்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.