”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராகத் தொடர்வார் என்பதை 2026-ல் உணர்ந்து கொள்வார்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி குறித்துச் செய்துள்ள பதிவில்,
‘‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’ - ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர்தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, '’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என நேற்று பேசியிருக்கிறார். ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. ’’2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அ.தி.மு.க அரசு தமிழகத்தில் அமையும்’’ - கடந்த 2022 பிப்ரவரி 12. சேலம், தாரமங்கலம். ’’இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும்’’ - 2024 ஜனவரி 25. எக்ஸ் தள பதிவு. ’’திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள்தான். நாட்கள் எண்ணப்படுகின்றன’’ - 2024 செப்டம்பர் 20. X தளப்பதிவு.
senthil balajiஇப்படி, ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராகத் தொடர்வார் என்பதை 2026-ல் உணர்ந்து கொள்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...