பொதுவாக காற்று மாசுபாடு காரணமாக அந்த காற்றை சுவாசிக்கும் நபரின் நுரையீரலை அது பாதிக்கிறது .பின்னர் ரத்த நாளங்கள் வழியாக அந்த மாசுள்ள காற்றில் உள்ள தீங்கு விளை விக்கும் பொருட்கள் இதயத்தை சென்றடைந்து விடுகின்றன .இந்த தீங்கு விளைவிக்கும் பொருலால் இதய தமனிகளில் வீக்கம் ஏற்பட்டு ,பின்னர் அது மரணத்தை கூட ஏற்படுத்தும் என்று இதய டாக்டர்கள் கூறுகின்றனர்
1.இந்த காற்று மாசுபாட்டால் உண்டாகும் நோயை தவிர்க்க உணவில் பின் வரும் ஊட்டச்சத்து நிறைந்த சில பொருட்களை கட்டாயம் சேர்க்க வேண்டும்
2.இஞ்சி சாறு மற்றும் கருப்பு மிளகு தூள் கலந்து உட்கொள்வது உடலின் இதயத்தின் உள் உறுப்புகளை வலுவடைய செய்து நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
3.இஞ்சியை தேனுடன் அல்லது குடைமிளகாயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
4.வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுங்கள் புளிப்பு சுவை உள்ள காய்கறிகளையும் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்
5.காற்று மாசு ஏற்படாமல் இருக்க உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க தண்ணீரின் அளவை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.மேலும் பூண்டு, மஞ்சள், ஆகியவற்றையும் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.