பிப்ரவரி 4ம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும் 11- 12 மணி வரை கருட வாகனத்திலும் பிற்பகல் 1 முதல் 2 மணி வரை அனுமன் வாகனத்திலும் உற்சவர் மலையப்பர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதையடுத்து பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6- 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் நிறைவாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்பர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
ரதசப்தமி நடைபெறுவதையொட்டி திருமலை திருப்பதி கோயிலில் பிப்ரவரி 3, 4, 5 தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அது போல் இலவச தரிசன டோக்கன்களும் விநியோகம் செய்யப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.