சீமான் தமிழ் ஈழத்திற்கு சென்று உளவு பார்த்து சிங்கள அரசுக்கும் பன்னாட்டு அரசிற்கும் தகவல் கொடுத்த பிறகு தான் தமிழீழம் முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளது என திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, “விடுதலை புலிகளின் பதுங்கு இடங்கள், போர் தளவாடங்கள், தளபதிகள் குறித்து சீமான் உளவு பார்த்து இலங்கை அரசுக்கு சொல்லி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. சீமான் தமிழ் ஈழத்திற்கு சென்று உளவு பார்த்து சிங்கள அரசுக்கும் பன்னாட்டு அரசிற்கும் தகவல் கொடுத்த பிறகு தான் தமிழீழம் முற்றிலுமாக அளிக்கப்பட்டுள்ளது. ஈழப்போராட்டத்துக்கு வராமல் சினிமா படப்பிடிப்புக்கு சென்றவர் சீமான். ஈழம் சென்று வந்தவுடன் அங்கு நடந்ததை பற்றி சீமான் ஏன் பேசவில்லை. சீமான், பிரபாகரன் ஒன்றாக இருந்த புகைப்படம் பொய் என்பது எங்களுக்கு அச்சம் அளிக்கிறது. சீமான், பிரபாகரன் சந்தித்த வீடியோ இன்னும் கொஞ்சம் நாட்களில் வெளிவரும்.
பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அதிமுகவும், தவெகவும் கள்ள மௌனம் காக்கின்றன. பெரியார் பற்றி ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை தெரிவிக்கும் சீமானை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்காதது ஏன்? பெரியார் குறித்து சீமான் பேசியதை விஜய் வேடிக்கை பார்த்து கள்ள மவுனமாக உள்ளார். பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானை, இபிஎஸ் மற்றும் விஜய் வேடிக்கை பார்ப்பது அயோக்கியத்தனமானது. ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆபத்தானவர் சீமான். சமஸ்கிருதம், இந்தி திணிப்பைவிட பெரியார் திணிப்பு ஆபத்தானது என சீமான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படவேண்டிய அசிங்கம் சீமான்” என்றார்.