உஷார்... ஜனவரி 31 கடைசி தேதி... விவசாயிகள் KYC அப்டேட் செய்யலைன்னா பிஎம் கிசான் திட்ட பணம் கிடைக்காது!
Dinamaalai January 29, 2025 01:48 PM

ஜனவரி 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்குள் இதை செய்யவில்லை எனில், பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதம் உங்கள் வங்கி கணக்கில் வரும் ரூ.2000 பணத்தில் சிக்கல் எழலாம். அதனால் விவசாயிகளே உடனே இதைச் செய்து முடிச்சுடுங்க. 

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம்  வருடத்திற்கு ரூ.6,000  வழங்கி வருகிறது. இதனை 3 தவணைகளாக வழங்கி வரும் நிலையில்  பிப்ரவரி மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000  வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்த பணத்தை பெறுவதற்கு கேஒய்சி அப்டேட்டை சரி பார்த்துக் கொள்ள வேண்டியது  அவசியம்.

அதன்படி  பணம் சரியான நபர்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்ள இகேஒய்சி அப்டேட் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை கேஒய்சி அப்டேட்டை சரி பார்க்காத விவசாயிகளுக்கு பணம் கிடைக்காது. எனவே இந்த செயல்பாட்டை விவசாயிகள் முடிப்பது அவசியம்.

இந்த செயல்பாட்டினை பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  சரி பார்த்துக் கொள்ளலாம். அதன்படி பிஎம் கிசான் அதிகாரபூர்வ இணையதளத்திற்குள் சென்று பயனாளியின் நிலைப்பக்கத்தை அணுகி பயனாளி நிலை என்பதை கிளிக் செய்து ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன் பிறகு தரவைப் பெறு என்பதை கிளிக் செய்து பயனாளியின் நிலையை சரிபார்த்து கட்டண நிலையை சரிபார்க்க வேண்டும்.   விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்கள் நிலை என்னவென்று காட்டப்படும். மேலும் இகேஒய்சி அப்டேட்டை சரி பார்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடைகிறது  என்பதால் அதற்குள் இந்த செயல்பாட்டினை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.