முடி கொட்டுவது என்பது அனைவருக்கும் இருக்கும் சாதாரண விஷயம் என எடுத்துக் கொள்ள முடியாது. கவனிக்காமல் விட்டால் நாளடைவில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடக் கூடியது. சிலருக்கு கொத்து கொத்தாக தினமும் முடி கொட்டுவது உண்டு. தவறான உணவு பழக்கங்கள், பொடுகு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இந்த முடி பிரச்சனைகளுக்கு எளிய மற்றும் பயனுள்ள தீர்வாக கிராம்பு நீரை பயன்படுத்தலாம். தினமும் இரவில் கிராம்பு நீரை பயன்படுத்துவதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிராம்பு தண்ணீரின் நன்மைகள் :
கிராம்பு நீரில் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதால் தூங்வதற்கு முன் இரவில் முடியின் வேர்களில் தடவி வந்தால் வேர்கள் வலுப்படுத்தி, முடி உதிர்வதை குறைக்கும். அதோடு முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் கிராம்பு நீர் உதவுகிறது. கிராம்பு தண்ணீர் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பொடுகு போன்ற தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. இது இரவில் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த உதவும். முடியில் வேர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்தை அளித்து முடிகளை உறுதி அடைய செய்கிறது.
கிராம்பு தண்ணீர் தயாரிக்கும் முறை :
கிராம்பினை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அதன் சாறு நன்கு இறங்க வைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீர் நன்கு ஆறிய பிறகு அல்லது இளம் சூட்டில் இருக்கும் போது, தலையில் அனைத்து பகுதிகளிலும் வேர்க்கால்களில் படும் படி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் இது அப்படியே இருக்கும் படி விட்டு விட வேண்டும். காலையில் எழுந்து சுத்தமான நீரால் தலையை அலசவோ அல்லது வழக்கம் போல் எண்ணெய் தேய்த்து கொள்ளவோ செய்யலாம். ஒரு கப் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் அளவிற்கு முழு கிராம்பை சேர்த்து கொதிக்க விடலாம். முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும் கிராம்பு சேர்த்து, வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம். கிராம்பு தண்ணீர் பயன்படுத்த முடியாதவர்கள், கிராம்பு எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.
கிராம் தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் :
* முடி வளர்ச்சி - இதில் முடி வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்து இருப்பதால் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. வேர்களை வலுவடைய செய்யும்.
* பொடுகு குறையும் - தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் தலையில் கிராம்பு தண்ணீர் தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை குறையும். இதில் ஆன்டி இன்ஃபிளமேட்ரி, ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் இருப்பதால் முடியின் வேர்கால்களை ஆரோக்கியமாக வைத்து, அரிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.
* வலிமையான முடி - இந்த கிராம்பு தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி வலுவடையும். இதில் ஆன்டிஆக்சிடன்ட் காரணிகள், பீட்டா கரோடின் அதிகம் இருப்பதால் தலைமுடிக்கு வலிமையை தரும்.
* முடி உதிராது - கிராம்பு தண்ணீரில் அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள், இரும்பு, பொட்டாசியம், ஆன்டிஆக்சிடன்ட்கள் இருப்பதால் முடி உதிர்வை தடுப்பதில் மிகப் பெரிய பங்களிக்கிறது. முடி கொட்டுவதை தடுத்து விடுகிறது.
* முடி வெடிப்பு குறையும் - இதில் தனித்துவமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் முடியின் நிறமி அளவை பாதுகாத்து, முடியில் வெடிப்பு ஏற்படால் பாதுகாக்கும்.