ஐசிசி நடத்தும் 9-வது சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பாகிஸ்தானில் போட்டி தொடங்கும் நிலையில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கிறது. அதன்படி இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டி கராச்சி தேசிய மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நிலையில் Star sports and network 18 ஆகிய சேனல்களில் நேரலையில் காணலாம். அதன் பிறகு ஜியோ ஸ்டார் நேரடி ஸ்ட்ரீமிங் செய்வதால் அந்த செயலியில் பார்த்து மகிழலாம். இந்த போட்டிக்கான மொத்த பரிசு தொகை 60 கோடி ரூபாயாக இருக்கும் கோப்பையை வெல்லும் மணிக்கு முதல் பரிசாக 19.5 கோடி ரூபாயும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் மணிக்கு 9.7 கோடி ரூபாயும் வழங்கப்படும். மேலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளின் விவரத்தை பார்ப்போம். அதன்படி,
பாகிஸ்தான் அணி: பாகர் சமன், பாபர் ஆசாம், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), சல்மான் ஆகா, தய்யப் தாஹிர், குஷ்தில் ஷா, பஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஆஃப்ரிதி, நசீம் ஷா, அப்ரார் அகமத், ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்நைன், உஸ்மான் கான், சௌத் ஷக்கீல்
நியூசிலாந்து அணி: வில் யங், டெவான் கன்வே, கேன் வில்லியம்சன், டாரில் மிட்செல், டோம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நேதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில்லியம் ஓரூர்கே, ஜேக்கப் டஃபி, கைல் ஜேமிசன், மார்க் சாப்மேன், ராசின் ரவீந்திரா.