கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் அருகே கங்கழா என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் ரெஜி என்பவர் மலையாள சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகின்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு மலையாள சினிமா படப்பிடிப்பு நடைப்பெற்றது. இதில் ரெஜியும் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்படத்தில் நடிக்க வந்த 9 வயது சிறுமியை ரெஜி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின் பெயரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகர் ரெஜியை கைது செய்துள்ளனர். இவ்வழக்கின் விசாரணை அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகர் ரெஜிக்கு 136 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் ரூ 1 லட்சத்து 97 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. அபராத தொகையில் ரூ 1 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.