உங்களுக்கு ஒரு நியாயம்? ஊருக்கு ஒரு நியாயமா?… உங்க போதைக்கு எதுக்கு மக்களை ஊறுகாயா பயன்படுத்துறீங்க… கொந்தளித்த அண்ணாமலை…!!!
SeithiSolai Tamil February 19, 2025 12:48 PM

தேசிய கல்விக் கொள்கை பற்றிய பேச்சுகள் தான் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி தர முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படியான நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும் கட்சி திமுக அமைச்சர்களே முன்மொழிக் கொள்கை என்றால் அது இந்தி தான் என தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படித்தார்கள் என்றால் தமிழ் கட்டாயம் இல்லை.

சிபிஎஸ்சி பள்ளிகளில் மட்டுமே இந்தி மொழி மூன்றாவது மொழியாக கட்டாயமாக இருக்கிறது. ஆங்கிலம் பயிற்று மொழி கட்டாயமாகும். அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மற்றும் கன்னடம் என பல மொழிகளில் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம். 52 லட்சம் அரசு பள்ளி மாணவர்களை தமிழக அரசு கட்டாயப்படுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழி மட்டுமே படிக்க வேண்டும் என்று கூறுகின்றது. அதன் காரணமாக தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் வியாபாரம் மட்டுமே 30 ஆயிரம் கோடி ஆகும். தமிழகத்தில் 30 லட்சம் குழந்தைகள் முன்மொழிக் கொள்கையில் பாடம் படிக்கின்றனர்.

ஒருவேளை நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை என்றால் நீங்கள் கூறிய 10 லட்சம் மாணவர்களுக்கு ஆதாரம் கொடுங்கள். இது தொடர்பாக தமிழக அரசு தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு ஒரு நியாயம்? ஊருக்கு ஒரு நியாயமா? எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்துறீங்க. மும்மொழி கொள்கையில் இந்தி வேண்டாம் என்றால் வேறு ஏதாவது ஒரு மொழியை படிக்க வையுங்கள். எதற்காக மக்களை இப்படி குழப்பி விடுகிறார்கள். அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் டிராமா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது மொழியை தடுத்து அடுத்த தலைமுறையை தமிழக ஆட்சியாளர்கள் அளித்து கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.