சைபீரியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Dinamaalai February 15, 2025 11:48 PM

ரஷியாவின் தெற்கு சைபீரியாவில்  அல்டார் குடியரசு பகுதியில், இன்று காலை 8.48 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருப்பதாக ரஷிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், அதனால்  பொது நிகழ்ச்சிகள் உட்பட சில நிகழ்ச்சிகள்  ரத்து செய்யப்பட்டு, சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.