தமிழகம் புதிய சாதனை: அமைச்சர் மா. சுப்ரமணியன் பெருமிதம்..!
Top Tamil News January 29, 2025 01:48 PM

அமைச்சர் மா. சுப்பிரமணியன் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

 

தமிழ்நாட்டின் மூளைச்சாவு நபர்களின் உறுப்புக்கொடை என்ற உன்னதத் திட்டம் 2024 ஆம் ஆண்டு ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் (2024) மட்டும் 268 மூளைச்சாவு ஏற்பட்ட நபர்கள் உறுப்புக்கொடை அளித்துள்ளனர். அவர்களிடமிருந்து 1,500 உறுப்புகள் மற்றும் திசுக்கள் கொடையாகப் பெறப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

மூளைச்சாவு உறுப்புக் கொடைத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், இந்திய அளவில், ஓராண்டில், ஒரு மாநிலத்தில் மட்டுமே இந்த அளவுக் கொடை இது வரையில் நிகழ்ந்ததில்லை. இம்மாபெரும் சாதனை சாத்தியமானதற்கான காரணம், நம்முடைய முதல்வர் அவர்களின் “உடல் உறுப்பு தானம் செய்தோரின் திருவுடல்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும்” எனும் உன்னதமான வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘அரசாணையே’ ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.