காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பான கூட்டம்; 04 மாநிலங்களுக்கு அழைப்பு..!
Seithipunal Tamil January 29, 2025 01:48 PM

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகள் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் தொடர்பாக விவாதித்து தீர்வு கண்டு வருகின்றன. 

அந்த வகையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 111-வது கூட்டம் இன்று (புதன்கிழமை ) நடக்கவுள்ளது. அத்துடன், நாளை (வியாழக்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37-வது கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டங்களில் பங்கேற்கும்படி தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய காவிரியோடு தொடர்புடைய 04 மாநிலங்களுக்கும் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் மற்றும் ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.