இன்று திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா புனித நீராடுகிறார்!
Dinamaalai January 27, 2025 11:48 AM

இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில்  மகா கும்பமேளா விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில் இன்று ஜனவரி 27ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கும்பமேளாவில் கலந்துக் கொண்டு புனித நீராடவுள்ளார்.

இது குறித்து மகா கும்பமேளா நிர்வாகம் கூறுகையில், “இன்று ஜனவரி 27ம் தேதி காலை 11:25 மணிக்கு அமித்ஷா பிரயாக்ராஜுக்கு வருகை தருகிறார். தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார். அதன் பின்னர் அவர் படே ஹனுமான் ஜி கோயில் மற்றும் அபய்வத்தை பார்வையிடுவார்.  ஜூனா அகாராவுக்குச் சென்று மதிய உணவு சாப்பிடுவார்.  அதன்பிறகு குரு சரணானந்த் ஜியின் ஆசிரமத்திற்குச் செல்வதும் அடங்கும். அங்கு அவர் குரு சரணானந்த் ஜி மற்றும் கோவிந்த் கிரி ஜி மகராஜ் ஆகியோரைச் சந்திக்கிறார். மாலையில் பிரயாக்ராஜில் இருந்து அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்வார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில்   ஜனவரி 13ம் தேதி  தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26 வரை நடைபெறும் மகா கும்பமேளாவில் மொத்தம் 40 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடுவார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி பக்தா்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை நிா்வகிக்க மாநில அரசு சாா்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உட்பட  73 நாடுகளின் தூதா்களும், பிபரவரி 1ம் தேதி புனித நீராட உள்ளனா்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.