கேரள மாநிலம் திருவனந்தபுரம், பலராமபுரத்தில் வசிக்கும் ஸ்ரீது மற்றும் ஸ்ரீஜித் தம்பதியினருக்கு, தேவேந்து என்ற 2 வயது மகன் உள்ளார். இன்று காலை, வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால், பெற்றோர் வீட்டில் எல்லா இடங்களிலும் தேடினர். குழந்தை எங்கும் காணாததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல் அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் குழந்தையின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரது பெற்றோர் மற்றும் மாமாவிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.