300 பேருக்கு பிறகு இந்த நடிகையை செலக்ட் பண்ணாங்க.. படம் சூப்பர் ஹிட் தெரியுமா?
CineReporters Tamil January 31, 2025 02:48 AM

தமிழ் சினிமாவில் ஒரு கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சோனியா அகர்வால். 7 ஜி ரெயின்போ காலனி ,கோவில் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் தான் இவரை பெரிய அளவில் மக்களிடம் போய் சேர்த்தது. இந்த நிலையில் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இவர் எப்படி தேர்வானார் என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

முதலில் இந்த படத்தில் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோர்தான் நடிக்க இருந்தார்களாம். அந்த நேரத்தில் மாதவன் பிரியமான தோழி படத்தில் பிசியாக இருந்திருக்கிறார். அதேபோல சூர்யா பிதாமகன் படத்தில் பிஸியாக இருந்தாராம். அதனால் அவர்கள் இருவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு தான் படத்தின் தயாரிப்பாளர் ரத்தினம் இவருடைய மகனை நடிக்க கேட்டிருக்கிறார்.

அப்போது ரவி கிருஷ்ணா மிகவும் குண்டாக இருந்ததனால் செல்வராகவன் யோசித்தாராம் .ஆனால் ஒரு மாதத்திற்குள் தன் உடம்பை இளைத்து மிகவும் ஸ்லிம்மாக வந்து நின்று இருக்கிறார் ரவி கிருஷ்ணா. அதன் பிறகு தான் அவர் இந்த படத்தின் ஹீரோவாக கமிட் ஆனாராம். அதன் பிறகு இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கு முன்னாடி 300 பேரை ஆடிசனுக்கு அழைத்திருக்கிறார்கள். யாருமே செட்டாகவில்லையாம்.

கடைசியாக சுப்பிரமணியபுரம் படத்தின் புகழ் சுவாதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 20 நாட்கள் நடித்தாராம். அதன் பிறகு அவர் எம்பிபிஎஸ் படிக்க போனதனால் கால்சீட் பிரச்சினை வந்திருக்கிறது. அதன்பிறகு அவரும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். அந்த நேரத்தில் கோவில் படத்தின் ஷூட்டிங்கில் சோனியா அகர்வால் இருந்திருக்கிறார். அந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் சோனியா அகர்வால் இருக்க ரத்தினம் சோனியா அகர்வாலை தொடர்புகொண்டு இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டாராம்.


ஏற்கனவே காதல் கொண்டேன் படத்தின் போது 7g ரெயின்போ காலனி படத்தின் ஸ்கிரிப்ட்டை செல்வராகவன் சோனியா அகர்வாலிடம் கூறியிருந்தாராம். அப்பொழுதே இந்த படத்தின் கதையில் நாம் நடித்தால் நன்றாக இருக்குமே என சோனியா அகர்வால் நினைத்து இருக்கிறார். இப்போது அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததுமே இதைவிட பெரிய சந்தோஷம் வேறு எதுவும் இல்லை என நினைத்து இந்த படத்திற்குள் வந்திருக்கிறார் சோனியா அகர்வால்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.