விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக அரசியல் ரீதியாக வலுவிழந்து வருகிறது என்பதைத்தான் அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை காட்டுகிறது. சென்னை ஈசிஆரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் காரில் திமுக கொடி இருந்ததை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்கள் திமுகவினர் என்று முடிவு செய்துவிட முடியாது. இருப்பினும் இந்த சம்பவத்தில் நடவடிக்கை என்பது தேவை.
கவன ஈர்ப்புக்காக சீமான் ஏதேதோ பேசும் நிலையில் பெரியாரை இப்படி கொச்சைப்படுத்துவது நல்லது கிடையாது. சீமான் பெரியாருடனான மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வக்பு வாரிய மசோதா என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. அரசியலமைப்புக்கு எதிரான பாஜக அரசு எதிர்ப்புகளை மீறி அந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மேலும் பாஜகவின் இந்த செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது என்று கூறினார்.