திருமுல்லைவாயலை சேர்ந்த சிந்தியா (வயது 35) என்பவர் அவரது தந்தை சாமுவேல் சங்கருடன் (வயது 70) வசித்து வந்தார். சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த சாமுவேலுக்கு, வீட்டிலேயே வைத்து டயாலிஸில் சிகிச்சையை டாக்டர் எபினேசர் என்பவர் செய்து வந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எபினேசரிடம் சிகிச்சை பெற்று வந்த சங்கர் வீட்டிலேயே திடீரென உயிரிழந்தார், மகள் சிந்தியா, வீட்டுக்கு வந்த எபினேசரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் எபினேசர் சிந்தியாவை கீழே தள்ளியதில், தலையில் அடிபட்டு அவர்உயிரிழந்துள்ளார்.
இதனை எதிர்பாராத டாக்டர் எபினேசர் இருவரின் சடலங்களையும் அப்படியே அறையில் பூட்டி விட்டு, ஏ.சியை ஆன் செய்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
அந்நிலையில், குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக இன்று அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற சென்ற போது சங்கர், சிந்தியாவின் சடலங்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளன.
இதனை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் டாக்டர் சாமுவேல் எபினேசரிடம் நடத்திய விசாரணையில் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.