வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, வீடுகளை வாங்கியோர் முழு தொகையை செலுத்திய பிறகு அவர்களுக்கு தற்போது விற்பனை பத்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து விரைவில் அவர்களுக்கு பட்டா வழங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக அவற்றை சென்னையில் வழங்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.