மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானேவில் 10 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் ஒரு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறார். அந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் பெண்ணுக்கு சிறுவன் மீது ஆசை வந்தது. அவர் அடிக்கடி சிறுவனை விருந்தினர் அழைத்து அழைத்துச் சென்று பலமுறை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
மேலும் இது பற்றி யாரிடமாவது சொன்னால் உனது தாய் தந்தையை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவன் தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறி அழுதான். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.