"தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்ற என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாகப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என அனைத்துக் காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறது.
குறிப்பாக பையம்பள்ளி, வலசை, செட்டிமேடு, மயிலாடும்பாறை, மோளப்பாளையம் ஆகிய ஐந்து இடங்கள் புதிய கற்கால தளங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள சென்னனூர் புதிய கற்காலத்தின் கண்டுபிடிப்புகளுக்குப் புதையல் களமாகக் கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் சுமார் 1 மீட்டரிலேயே கற்கால படிவுகளின் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அகழ்வாராய்ச்சி பணிகள்ஜூன் 2024-ல் இந்தப் பகுதியில் தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், இரண்டு இடங்களில் 11 அகழிகள் தோண்டப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து வெவ்வேறு கலாசார மட்டங்களின் 327 கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நுண் கற்காலத்தைச் சேர்ந்த கல் கத்திகள், கையால் செய்யப்பட்ட மட்பாண்டங்கள், புதிய கற்காலத்தைச் சேர்ந்த எரிந்த பாத்திரங்கள் மற்றும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு மற்றும் சிவப்புப் பாத்திரங்கள் போன்ற கருவிகள் மீட்கப்பட்டுள்ளன.
மற்ற ஐந்து பகுதிகளில் சுமார் 10 - 15 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம், இங்கு ஒரு மீட்டர் ஆழத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மேலும், ஆழமாகத் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தால், இன்னும் அதிக ஆச்சரியங்கள் நிகழலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...