தமிழக வெற்றி கழகத்தில் 3 துணை பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் 3 துணை பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்புக்கு நியமனம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜுனா பதவி குறித்த அறிவிப்போடு, புது நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.