தாயுடன் தகாத உறவில் இருந்த கொத்தனார்… ஆத்திரத்தில் குடலை உருவி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த மகன்கள்…. கொடூர சம்பவம்…!!!
SeithiSolai Tamil January 31, 2025 10:48 PM

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் தாகூர் (27), ஜெயேஷ் தாகூர் (23) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இந்த பெண்ணுக்கும் கொத்தனார் வேலை பார்க்கும் ரடன்ஜி தாகூர் என்பவருடன் தகாத உறவில் இருந்து உள்ளார். இது அப்பெண்ணின் மகன்களுக்கு பிடிக்கவில்லை. இதனால்அவர்கள் இருவரும், ரடன்ஜி தாகூரிடம் சென்று தாயுடன் தகாத உறவை நிறுத்திக் கொள்ள வலியுறுத்தினார். ஆனால் அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரடன்ஜி தாகூரை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி தனது வீட்டிற்கு அருகே ரடன்ஜி வந்தபோது 2 மகன்களும் அவரை கம்பியால் தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்தார். அதன் பின் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ரடன்ஜி தாகூரை சரமாரியாக தாக்கினார். இதில் அவரின் குடல் கீழே சரிந்தது. இதையடுத்து அந்த இளைஞர்கள் அவரது குடலை எடுத்து வானத்தை நோக்கி வீசி துண்டு துண்டாக வெட்டி வீசி உள்ளனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் ரடன்ஜி தாகூரின் மகன் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்களது செல்போன் நம்பரை வைத்து 2 பேரையும் கைது செய்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.