டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
1. பாவனா கவுர் – பாலம்
2. நரேஷ் யாதவ் – மெஹ்ராலி
3. ராஜேஷ் ரிஷி – ஜனக்புரி
4. மதன் லால் – கஸ்தூர்பா நகர்
5. ரோஹித் மெஹ்ராலியா – திரிலோக்புரி
6. பி.எஸ். ஜூன் – பிஜ்வாசன்
7. பவன் சர்மா – ஆதர்ஷ் நகர் ஆகிய 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.