கும்பமேளாவில் துறவறம் பூண்ட நடிகை மம்தா குல்கர்னி அகாரா மடத்தில் இருந்து நீக்கம்..! பின்னணி என்ன?
Vikatan January 31, 2025 10:48 PM

பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிறகு உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்து கொண்டார்.

கும்பமேளாவில் மம்தா குல்கர்னி தன்னை சந்நியாசியாக மாற்றிக்கொண்டதோடு தனது பெயரை ஸ்ரீ யாமை மம்தா நந்தகிரி என்று மாற்றிக்கொண்டார். சந்நியாசிகளை உருவாக்கும் கின்னர் அகாரா ஆன்மீக மடத்தில்தான் மம்தா குல்கர்னி தன்னை சந்நியாசியாக மாற்றிக்கொண்டார். அதோடு, அவர் அந்த மடத்தில் மகாமண்டலேஷ்வராக மாற்றப்பட்டார். அவர் சந்நியாசியாக மாறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில், திடீரென மம்தா குல்கர்னி கின்னர் அகாரா மடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மம்தா குல்கர்னி நீக்கப்பட்டதற்கான உத்தரவு

இது தொடர்பாக அந்த மடத்தின் தலைவர் ரிஷி அஜய் தாஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், "மம்தா குல்கர்னி கின்னர் அகாரா மடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதோடு அவரை எனக்கு தெரியாமல் கின்னர் அகாராவில் சேர்த்துக்கொண்டதற்காக மகாமண்டலேஷ்வர் லட்சுமி நாராயண் திரிபாதியும் கின்னர் அகாராவில் இருந்து நீக்கப்படுள்ளார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மம்தா குல்கர்னி தன்னுடனும், கின்னர் அகாராவுடனும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்பில் இருந்தார் என்றும், அவர் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவதாக மகாமண்டலேஷ்வர் லட்சுமி நாராயண் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக 25 ஆண்டுகள் கழித்து வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய மம்தா குல்கர்னி அளித்திருந்த பேட்டியில், தான் ஏன் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

சந்நியாசியாக மாறிய மம்தா குல்கர்னி

அதில் தான் குரு ககன் கிரியை சந்தித்த பிறகு ஆன்மீகத்தில் ஈடுபடுவது அதிகரித்தது. நான் தியாயம் செய்ய ஆரம்பித்தேன். 2000ம் ஆண்டில் பாலிவுட்டில் இருந்து விலகி முழுமையாக தியானம் செய்ய ஆரம்பித்தேன். 2012-ம் ஆண்டு வரை தியானத்தில் நேரத்தை கழித்தேன். பல ஆண்டுகள் துபாயில் வசித்தேன். 12 ஆண்டுகள் 2 படுக்கை அறை கொண்ட வீட்டில் பிரம்மச்சரியத்துடன் வாழ்ந்தேன்''என்று தெரிவித்தார்.

2017ம் ஆண்டு மும்பையில் உள்ள தானே நீதிமன்றம் மம்தா குல்கர்னிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. போதைப்பொருள் வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் தான் கோர்ட் மம்தா குல்கர்னியை விடுதலை செய்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.