நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி விளங்கி வருகிறது. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு மற்றும் அவரது நடவடிக்கை பிடிக்கவில்லை என கூறி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கடந்த சில நாட்களாக கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கி 15 ஆண்டுகளாகியும் ஒரு கட்டமைப்பை உருவாக்க சீமான் கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.