தமிழ் திரையுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்த பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் சினேகன். இவர் 2021ம் ஆண்டு சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது குறித்த வீடியோவை கன்னிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 25 ம் தேதி இருவருக்கும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு வீடியோ ஒன்றை கன்னிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கன்னிகாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வளைகாப்பு நடத்தப்பட்டது. இது குறித்த வீடியோவும் வெளியானது. இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து பல டிவி பிரபலகங்களும், ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்வது தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளனர். அதில் சினேகன் மிகவும் அக்கறையாக கன்னிக்காவை கவனித்து கொள்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் 2 வது வெற்றியாளராக வெற்றி பெற்றார். முன்பு இருந்தே பல பாடல்களை எழுதி இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அதிகம் கவனிக்கப்பட்டார். பிகபாஸ்க்கு பின்னரே சீரியல் நடிகையாக இருந்த கன்னிக்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற" என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும் மகளே எந்தன் தாயாகவும் இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ... இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள். என்றும் அன்புடன் சினேகன் - கன்னிகா சினேகன். என பதிவிட்டுள்ளார்.