தன்னுடைய கனவுகாக…. மாதம் ரூ.1 1/2 லட்சம் சம்பள வேலையை உதறி தள்ளிய பெண்….!!!
SeithiSolai Tamil January 31, 2025 11:48 PM

ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக கிடைக்கும் வேலைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பெங்களூரில் வசிக்கும் அஸ்மிதா பால் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாத சம்பளம் ஒன்றரை லட்சம் ஆகும். இருப்பினும் அவருக்கு கேக், கிரீம் உள்ளிட்டவை அடங்கிய பேக்கரி கடையை தொடங்க வேண்டும் என்று ஆர்வம் இருந்துள்ளது. இதனால் இது தொடர்பாக தனது கணவர் சாகரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தான் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்ததை ராஜினாமா செய்து விட்டு தனக்கு பிடித்த பேக்கரி தொழிலை செய்ய தொடங்கினார். இந்நிலையில் அஸ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் புகைப்படத்தை அவரது கணவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் மாதம் ஒன்றை லட்சம் சம்பளம் பெறும் வேளையில் இருந்து விலகிய என்னுடைய மனைவி இதனை செய்து முடித்துள்ளார். கடவுளுக்கு நன்றி என்று கூறி இருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, மெடிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.