சேலம் மாவட்டத்தில் உள்ள கணக்குப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான அய்யன் துரை (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகளும், 4 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் அய்யன் துரை ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் நிதி நிறுவனம் மேலாளர் நெருக்கடி கொடுத்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து அய்யன் துரை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யன் துரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அய்யன் துரையில் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது பற்றி உறவினர்கள் கூறும்போது கடந்த 19 மாதமாக அய்யன் துரை கடன் தொகையை சரியாக செலுத்துவிட்டார். இந்த மாதம் தான் தாமதம் ஆகியுள்ளது. அதற்கு நிதி நிறுவன மேலாளர் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் அய்யன் துரை தற்கொலை செய்துள்ளார். சம்பந்தப்பட்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.