Sai abhyankkar: பிரபல ஆல்பம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைப்பில் மூன்றாவது ஆல்பம் வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
சாய் அபியங்கர் வளர்ச்சி: பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகனாக அறிமுகமானவர் சாய் அபியங்கர். கடந்த வருடம் கட்சி சேர பாடலை இசையமைத்து திரையுலகில் அறிமுகமானவர். பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஹிட்டடித்தது.
அதை தொடர்ந்து ஆச கூட பாடலை இசையமைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். ஆல்பம் இன்ஸ்டாவில் வைரல் ஹிட்டடிக்க யார் இந்த பையன் என்ற அளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டார். தொடர்ச்சியாக ஆல்பம் டூ சினிமா வாய்ப்பும் குவிந்தது.
சினிமா வாய்ப்பு: தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்தினை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். அப்படத்துக்கு இசையமைப்பாளராக சாய் அபியங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா45 படத்திற்கும் தற்போது சாய் அபியங்கர் மியூசிக் செய்ய இருக்கிறார்.
அதிலும் இப்படத்தில் முதல் இசையமைப்பாளராக இருந்தது ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவரின் இடத்துக்கு சாய் அபியங்கர் வந்திருப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடிக்க சூர்யா வேறு துடித்து கொண்டு இருப்பதால் கண்டிப்பாக பலரின் ஆசை சாய் அபியங்கர் கையில் இருக்கிறது.
சித்திரி புத்திரி: இந்நிலையில் இவரின் மூன்றாவது ஆல்பம் பாடலான சித்திரி புத்திரி வெளியானது. இதில் நடிகையாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். ஆனால் மற்ற ஆல்பம் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு போல இந்த பாடலுக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் போனது.
அது மட்டுமல்லாமல், மீனாட்சி சவுத்ரி இந்த ஆல்பத்திற்கு ஒட்டாத அளவு இருப்பதாகவும் சாய் அபியங்கர் தேவையே இல்லாமல் ஓவர் ஹைப் ஏத்த சில விஷயங்களை ஆல்பமில் சேர்த்து இருப்பதும் ரசிகர்களுக்கு கடுப்பை ஏத்தி இருக்கிறது. தற்போது சூர்யா45ன் நிலையை நினைத்து ரசிகர்கள் கடுப்பாகி கொண்டுள்ளனர்.