Union Budget 2025 : `உங்கள் வருமானத்திற்கு வரி உண்டா?' - இங்கே செக் செய்து கொள்ளுங்கள்!
Vikatan February 01, 2025 10:48 PM

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகைக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது, நிச்சயம் 'ஹேப்பி' நியூஸ். கடந்த ஆண்டு வருமான வரி சலுகை உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக இருந்த நிலையில், இப்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

'என்னுடைய வருமானத்திற்கு வரி இருக்கா... இல்லையா?' என்ற கேள்வி, இப்போது உங்களுக்கு எழுந்திருக்கலாம். உங்களது வருமானம் ரூ.12 லட்சம் பிளஸ் புதிய வரி முறையில் வழங்கப்படும் நிரந்தர கழிவு ரூ.75,000-க்குள் இருந்தால்...

நிர்மலா சீதாராமன்
ஆனால், ரூ.12,75,001 - ஆக உங்கள் வருமானம் இருந்தாலும், நீங்கள் வருமான வரி கட்ட வேண்டும்.

அதன்படி, உங்கள் வருமானத்தின் முதல் 4 லட்சத்திற்கு எந்த வரியும் இல்லை.

அடுத்து உள்ள 4 - 8 லட்சத்திற்கு 5 சதவிகிதமும்,

8 - 12 லட்சத்திற்கு 10 சதவிகிதமும்,

12 - 16 லட்சத்திற்கு 15 சதவிகிதமும்,

16 - 20 லட்சத்திற்கு 20 சதவிகிதமும்,

20 - 24 லட்சத்திற்கு 25 சதவிகிதமும்,

24 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதமும் வருமான வரியாக விதிக்கப்படும்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.